மலையக கட்டுமான தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காது பணி நீக்கம் : நடவடிக்கைகளை மேற்கொண்டு பெற்றுக் கொடுத்த செந்தில் தொண்டமான் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 4, 2022

மலையக கட்டுமான தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காது பணி நீக்கம் : நடவடிக்கைகளை மேற்கொண்டு பெற்றுக் கொடுத்த செந்தில் தொண்டமான்

மலையகத்திலிருந்து கட்டுமான பணிக்காக கொழும்பில் உள்ள நாவல பிரதேசத்தில் தனியார் நிறுவனமொன்றிற்கு தொழில் புரிய சென்ற 15 இற்கும் மேற்பட்ட மலையக கட்டுமான தொழிலாளர்கள் பம்பலபிட்டியில் உள்ள கட்டுமான பணியகத்தில் பணியில் ஈட்டுபட்டிருந்தனர்.

அவர்களுடைய வேலையை நிறைவு செய்த பின், குறித்த தனியார் நிறுவனம் சம்பளத்தை வழங்க மறுப்பு தெரிவித்ததையடுத்து, தொழிலாளர்களுக்கும் தனியார் நிறுவனத்தினருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. 

இம்முறுகல் நிலை காரணத்தினால் தொழிலாளர்கள் சம்பளம் இன்றி இரவோடு இரவாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து தலைநகர் கொழும்பில் தொழிலாளர்கள் உணவின்றி நிர்க்கதிக்குள்ளாகினர்.

இச்சம்பவம் குறித்து தொழிலாளர்கள் முன்னெடுத்த முறைப்பாடுகளுக்கு எவ்வித தீர்வும் எட்டப்படாத நிலையில் இது குறித்து இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு தொழிலாளர்களால் கொண்டுவரப்பட்டது.

செந்தில் தொண்டமான் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தினூடாக தனியார் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கையெடுத்ததுடன், இந்த பிரச்சினை குறித்து தொழில் அமைச்சின் ஊடாக தனியார் நிறுவனத்தின் மீது விசாரணை முன்னெடுக்குமாறு செந்தில் தொண்டமான் பணிப்புரை வழங்கினார்.

இதனையடுத்து செந்தில் தொண்டமானால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு அமைய தனியார் கம்பனி நிர்வாகம் உனடியாக தொழிலாளர்களை அழைத்து அவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை வழங்கியது. 

மலையகத்தின் பல பிரதேசங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சம்பளத்தை பெற்றுக் கொண்டு மலையகம் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment