சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் விமான நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதியில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட கார் குண்டுத் தாக்குதலில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர்.
Avisione என்ற வீதியில் துப்பாக்கி துளைக்காத கார்கள் உள்ளடங்கலான ஒரு வாகனத் தொடரணியை குறி வைத்து மேற்படி கார் குண்டுத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு மருத்துவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த தாக்குதலுக்கு அல்-ஷபாப் குழு உரிமை கோரியதுடன், இது "வெளிநாட்டு அதிகாரிகளை" குறிவைத்து நடத்தப்பட்டதாக தாக்குதல் என்று ஒரு சுருக்கமான அறிக்கையில் கூறியும் உள்ளது.
No comments:
Post a Comment