ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக செயற்பட்டு வரும் எம்.எச்.எம். பைறூஸ் தனது உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (1) வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பைறூஸ் போட்டியிட்டு பெற்றி பெற்றிருந்தார்.
இவ்வாறு வெற்றி பெற்ற அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்கி தவிசாளர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவ்விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பிரகாரம் பைறூஸ் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
.jpg)

No comments:
Post a Comment