எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் - News View

About Us

About Us

Breaking

Friday, October 31, 2025

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி நள்ளிரவு (01)  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயால் குறைக்கப்படவுள்ளதுடன், சூப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது.

அதேவேளை பெற்றோல் ஒக்டேன் 95, ஒட்டோ டீசல், மண்ணெண்ணெய் விலைகளில் மாற்றமில்லை.

அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.

CEYPETCO/ LIOC
பெற்றோல் 92 : ரூ. 5 குறைப்பு - ரூ. 299 இலிருந்து 294
சுப்பர் டீசல் : ரூ. 5 அதிகரிப்பு - ரூ. 313 இலிருந்து ரூ. 318
பெற்றோல் 95 : விலையில் மாற்றமில்லை - ரூ. 335
ஒட்டோ டீசல் : விலையில் மாற்றமில்லை - ரூ. 277
மண்ணெண்ணெய் : விலையில் மாற்றமில்லை - ரூ. 180

இதேவேளை, SINOPEC நிறுவனமும் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.

No comments:

Post a Comment