இவ்வாண்டின் ஜனவரி மாத முதல் 10 நாட்களில் மொத்தம் 29,420 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதே கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் மொத்தமாக 1,682 சுற்றலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இவ் வருடத்தின் முதல் பத்து நாட்களில் அந்த தொகையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி 2022 ஜனவரி 1-10 வரையான காலப் பகுதியில் 29,420 சுற்றலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அவற்றில் அதிகளவானோர் ரஷ்யா, இந்தியா, உக்ரேன் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுளிலிருந்து வருகை தந்தவர்கள் ஆவர்.
No comments:
Post a Comment