ஒட்டமாவடி பாத்திமா பாலிகா வரலாற்றில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட அதிஉயர் விருது : முதல் விருந்தினராக கலந்துகொண்டார் கிழக்கு மாகாண ஆளுநர் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 6, 2025

ஒட்டமாவடி பாத்திமா பாலிகா வரலாற்றில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட அதிஉயர் விருது : முதல் விருந்தினராக கலந்துகொண்டார் கிழக்கு மாகாண ஆளுநர்

ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகள், க.பொ.த. சாதாரண தரம் கற்று சகல பாடங்களிலும் அதிஉயர் சித்தியை பெற்ற மாணவிகளுகள் ஆகியோர் பாத்திமியன்ஸ் அதிஉயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இவ்விருது வழங்கும் நிகழ்வானது இப்பாடசாலையின் அதிபர் ஏ.எல். அஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் முறைசார் கல்வி மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகளில் திறமைகளை வெளிக்காட்டி வெற்றியீட்டும் மாணவர்களுக்கு இவ்விருது இப்பாடசாலையின் சமூகத்தினால் தொடர்ச்சியாக வழங்கப்படவிருக்கின்றது. அத்தோடு, இவ்விருதினை பெறும் பாத்தியமியன்ஸ்களில் பதிவுகளை தொடர்ச்சியாக இப்பாடசாலை ஆவணப்படுத்தலுக்குட்படுத்தப்படும்.

இப்பாத்தியமின்ஸ் அதிஉயர் விருதினை முதற்தடவையாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் மாணவிகளுக்கு வழங்கப்பட்டதனால் இப்பாடசாலை பெருமிதம் அடைகின்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, சிறப்பு விருந்தினாராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, கௌரவ விருந்தினராக கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் டாக்டர் எச்.எம்.ஜே. நசீபா, தென்கிழக்கு பல்கலைகழக விரிவுரையாளர் நுஸ்கியா ஹஸன், விசேட அதிதியாக இப்பாடசாலையின் முதல் அதிபரும் ஓய்வுபெற்ற வலயக் கல்விப் பணிப்பாளருமான எம்.ஜ. சேகுஅலி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அத்தோடு, மாணவர்களினால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரகேற்றப்பட்டது.

பாடசாலையின் அதிபர் ஏ.எல். அஸ்கர் தனது தலைமை உரையில், பாடசாலையின் தேவைகள் குறித்தும் பாடசாலை எதிர்காலத்தில் அடையவிருக்கும் இலக்குகள் குறித்தும் விரிவாக உரையாற்றினார். 

அதனைத்தொடர்ந்து உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, எதிர்காலத்தில் புதிய கல்வி கொள்கைகளுக்கு அமைவாக பாடசாலைகள் நவீன கல்வி உபகரணங்களுடன் அபிவிருத்திப்பாதை ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள் கல்வி வளர்ச்சி பெறுவதற்கு அரசாங்கம் மிகுந்த கர்சனை கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

பாடசாலையின் வரலாறு, சாதனைகள் மற்றும் பாடசாலை அடைய வேண்டிய தேவைப்பாடுகள் தொடர்பாக தரம் 11 இல் கல்வி கற்கும் ரமீஸ் ரபாவினால் சிறப்பு பேச்சு ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பிரதம அதிதி பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தனது உரையில், தான் கல்வி கற்று முன்னேறிய முறை தொடர்பாகவும் கல்வியிலுள்ள மூன்று படித்தரங்களில் அறிவுத்திறன் மனப்பாங்கு வளர்ச்சியில் மாற்றங்களை கொண்டுவருவதின் ஊடாக பாடசாலை மாணவர்கள் சமூகத்தில் நற்பிரஜைகளாக வர முடியும் என்றும் இப்பாடசாலை தொடர்பாக கர்சனை கொண்டு எதிர்காலத்தில் கல்வி துறையினரோடு கலந்துரையாடி இப்பாடசாலையிலுள்ள விடயங்களை பூர்த்தி செய்வதற்கு தன்னால் முடியுமான உதவிகளை செய்வேன் என்று குறிப்பிட்டார். 

அத்துடன் ஆளுநர் பாடசாலையின் சூழலை நேரடியாக சென்று பார்வையிட்டமை பாடசாலை சமூகத்தின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

இவ்விழாவினை சிறப்பாகவும் வெகுவிமர்சையாகவும் நடாத்துவதற்கு பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவும், இப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினர் அயராது முயற்சி செய்தமை பாராட்டதக்கதாகும்.

No comments:

Post a Comment