நீதிமன்றங்களின் அண்மைக்கால தீர்ப்புக்களை அவதானிக்கின்றபோது, நாட்டின் நீதித்துறை சுதந்திரமாகச் செயற்படுவதாகக் கருத முடிகின்றதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பிரபல பெண் எழுத்தாளர் நூருல்ஐன் எழுதிய முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் ஆய்வு நூலான "திதுலனதாரக" (மின்னும் தாரகை) என்ற சிங்கள நூலின் வௌியீட்டு விழா நேற்று முன்தினம் சனிக்கிழமை மருதானை அல்ஹிதாயா பாடசாலையில் நடைபெற்றது.
இதில் உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது, நீதி மன்றங்களின் அண்மைக்கால தீர்ப்புக்கள் அவற்றின் சுயாதீனச் செயற்பாடுகளையே காட்டுகின்றன. இது மகிழ்ச்சிப்படக் கூடிய விடயம்.
முன்னாள் ஆளுநர் அஸாத் சாலியின் விடுதலை மற்றும் யானைகள் வளர்ப்பது தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கள் முதுகெலும்புள்ள நீதிபதிகளின் செயற்பாடுகளாகவே உள்ளன.
அஸாத் சாலிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கின் உள்நோக்கத்தை அறிந்து கொண்ட நீதிபதி, மனுதாரர்களுக்கு கன்னத்தில் அறைந்தாற்போன்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
யானைகள் வளர்ப்பு விடயத்திலும், அமைச்சரவையின் தீர்மானத்துக்கு ஏற்ப, வழக்குகளை வாபஸ் பெற முடியாதுதெனவும், சமூகப் பொறுப்புடன் சட்டமா அதிபர் திணைக்களம் செயற்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் பதில் வழங்கியது.
பெண்களின் திறமைகளுக்கு வேலி போடுகின்ற அல்லது அவர்களை மட்டுப்படுத் தும் வகையிலான சிந்தனைகளை, காலவோட்டம் கருதி ஏற்க முடியாத நிலை இன்று ஏற்பட்டு வருகிறது. இதனால், பக்குவமாகவே இவ்விடயங்களை கையாள முடிகின்றது.
நூருல்ஐன், லரீனாஹக், இஸ்ஸத் ரிஹானா என்ற" அனார்' போன்ற பெண் எழுத்தாளர்களின் கற்பனை வளம், இலக்கிய நயங்களினால் நமது சமூகம் பெருமைப்படக் கூடியதாகவுள்ளன.
பெண்கள் மீதான ஆண்களின் நிர்வாகம் குடும்ப விடயத்தில்தான் என்பதாகவே, இஸ்லாத்தின் சட்டத்துக்கு பொருள் கொள்ளப்பட வேண்டும்.
நாட்டில் எது நடந்தாலும் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை குறைகூறுவதற்கென்றே ஒரு கூட்டம் ஓடித் திரிகின்ற காலமிது. இதைத் தீர்ப்பதில், அரசியல் தலைமைகளுக்கும் ஆன்மீகத் தலைமைகளுக்கும் இடையில் ஏற்பட்ட இழுபறிகள்தான், இன்று குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்த நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.
நான், நீதியமைச்சராக இருந்த காலத்திலும் இந்தப் பிரச்சினையை தீர்க்க முயற்சிக்கப்பட்டு 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
No comments:
Post a Comment