'கெசல்வத்த பவாஸ்' என்பவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் (CCD) குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
சந்தேகநபர்களிடம் இருந்து 4 வாள்கள் மற்றும் அவர்கள் பணித்த காரொன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், 23 - 31 வயதுக்கு உட்பட்ட, வாழைத் தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வாழைத் தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய சோனகத் தெருவில் கடந்த சனிக்கிழமை (04) இரவு 11 மணியளவில் மொஹமட் காமில் மொஹமட் பவாஸ் என்பவர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் போதைப்பொருள் தொடர்பிலான பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment