மஜ்மா நகர் மையவாடி யாட் வீதிக்கான அடிக்கல் நடுதல், மர நடுகை திட்டத்தையும் ஆரம்பித்து வைக்கிறார் நஸீர் அஹமட் - News View

Breaking

Wednesday, December 1, 2021

மஜ்மா நகர் மையவாடி யாட் வீதிக்கான அடிக்கல் நடுதல், மர நடுகை திட்டத்தையும் ஆரம்பித்து வைக்கிறார் நஸீர் அஹமட்

சூடுபத்தினசேனை மஜ்மா நகர் கொரோனா விசேட மையவாடி யாட் வீதிக்காக சுமார் 68 மில்லியன் ரூபா செலவில் மாபெரும் அபிவிருத்தி ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 03.12.2021 நாளை வெள்ளிகிழமை பி.ப 3.30 மணிக்கு இடம் பெறவுள்ளது. 

இவ் அபிவிருத்தி திட்டத்தினை பிரதம அதீதியாக கலந்துகொண்டு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அல்ஹாபில் நசீர் அஹமட் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

(இதற்கான நிதியினை பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே நிதி அமைச்சின் ஊடாக பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது)

அதனுடன் இணைந்ததாக மஜ்மா மேற்கு, மஜ்மா கிழக்கு ஆகிய பகுதிகளில் ஆயிரம் மரங்கள் நடும் வேலைத்திட்டத்திற்கான ஆரம்ப கட்ட நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்

No comments:

Post a Comment