சம்மாந்துறையிலும் வெடித்தது : முதலாவது சம்பவம் பதிவானது - News View

Breaking

Wednesday, December 1, 2021

சம்மாந்துறையிலும் வெடித்தது : முதலாவது சம்பவம் பதிவானது

ஐ.எல்.எம் நாஸிம்

சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட வளத்தாப்பிட்டி 1 கிராம சேவையாளர் பகுதியில் இன்று (2) காலை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

இன்று காலை 10 மணியளவில் தேநீர் தயாரிப்பதற்காக எரிவாயு அடுப்பினை செயல்படுத்திய போது குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

எரிவாயு அடுப்பினை செயற்படுத்தி விட்டு வெளியில் வந்து வேறு வேலை செய்து கொண்டிருந்தவேளை அவர்களது சமையலறையில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டதை உணர்ந்து அங்கு போய்பார்வையிட்டபோது குறித்த எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த எரிவாயு வெடிப்பு சம்பவத்தின் போது எதுவித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.

குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலிசாருக்கும் கிராம சேவகர் அலுவலருக்கும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment