ஒமிக்ரோன் வைரஸ், தற்போது 89 நாடுகளில் பரவியுள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இந்நிலையில், டெல்டா வகையை விட ஒன்றரை நாள் முதல் 3 நாளில் ஒமிக்ரோன் வைரஸ் இரு மடங்காக அதிகமாக பரவுகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
டெல்டா வைரசை விட ஒமிக்ரோன் வைரஸ் உலகமெங்கும் விரைவாக பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
ஒமிக்ரோன் என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது.
முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது.
இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, பிரிட்டன், இத்தாலி, போர்ச்சுகல், ஸ்காட்லாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், நைஜீரியா, பிரான்ஸ், இந்தியா, ஐஸ்லாந்து, இலங்கை உள்ளிட்ட 89 நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸ் பரவியுள்ளது.
இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் பரவ தொடங்கிய ஒமிக்ரோன் வைரஸ், தற்போது 89 நாடுகளில் பரவியுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், டெல்டா வகையை விட ஒன்றரைநாள் முதல் 3 நாளில் ஒமிக்ரோன் வைரஸ் இரு மடங்காக அதிகமாக பரவுகிறது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment