க.பொ.த சாதாரண தரத்தைப் பூர்த்தி செய்த 1 இலட்சம் மாணவர்களுக்கான ஆட்சேர்ப்பு வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரச சேவைக்கு இதுவரை 45,000 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் சமுர்த்தி, நுண் நிதி, சுயதொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவிக்கையில், 2015-2019 காலப்பகுதியில் அரச சேவைக்கு வழங்கப்பட்ட மொத்த வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 22,145 ஆகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு மாத்திரம் 60,000 பட்டதாரி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த 60,000 பேருக்கு பயிற்சிக் காலம் முடிந்து அவற்றை உறுதிப்படுத்தத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், க.பொ.த சாதாரண தரம் வரை படித்த அல்லது க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத 100,000 இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment