ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார் அஜாஸ் படேல் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 4, 2021

ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார் அஜாஸ் படேல்

இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நேற்றையதினம் நியூஸிலாந்து அணி வீரர் அஜாஸ் படேல் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இடது கை சூழற்பந்து வீச்சாளரான அஜாஸ் படேல் (வயது 33) நேற்றைய இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த சாதனையை புரிந்தார்.

47.5 ஓவர்களுக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட அவர் 119 ஓட்டங்களை வழங்கி 10 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இதன் மூலம் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றியவர்களான ஜிம் லேக்கர் மற்றும் அனில் கும்ப்ளேவுக்கு அடுத்த படியாக பட்டியலில் இடம் பிடித்தார்.

ஜிம் லேக்கர் 1956 இல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 53 ஓட்டங்களை வழங்கி 10 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

அது போல அனில் கும்ப்ளே 1999 இல் பாகிஸ்தானுக்கு எதிராக 74 ஓட்டங்களை வழங்கி இந்த சாதனையை படைத்திருந்தார்.

அஜாஸ் படேல் சளைக்காமல் 47.5 ஓவர்களில் 119 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுகளை எடுத்தது, இந்தியாவை முதல் இன்னிங்சில் 325 ஓட்டங்களுக்குள் கட்டுப்பட செய்தது.

ஆனால் நியூஸிலாந்து பதில் தாக்குதலை தொடங்கிய போது அவர்களால் சோபிக்க முடியவில்லை. அதன்படி முதல் இன்னிங்ஸில் அவர்கள் வெறும் 28.1 ஓவர்களில் 62 ஓட்டங்களுக்குள் சுருண்டனர்.

இதனால் 332 ஓட்ட முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி, சற்று முன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 101 ஓட்டங்களை குவித்துள்ளது.

No comments:

Post a Comment