இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை : 13 பேர் பலி : ஊரை விட்டு வெளியேறிய மக்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 4, 2021

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை : 13 பேர் பலி : ஊரை விட்டு வெளியேறிய மக்கள்

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள செமேரு எரிமலை சனிக்கிழமையன்று வெடித்துள்ளது. இதனால் அருகிலுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை சாம்பல் மற்றும் கரும் புகை சூழ்ந்தமையினால் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

எரிமலையில் இருந்து வெளியேறிய நெருப்புக் குழம்புகள் அருகில் உள்ள கிராமங்களை சென்றடைந்த நிலையில், 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிமலை வெடிப்பின் விளைவாக குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன (BNPB) தகவல்களை மேற்கொள்ளிட்டு அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எரிமலை வெடிப்பினால் ஒரு பாலம் இடிந்து விழுந்ததாகவும், சாம்பல் மற்றும் புகைகள் வானை எட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.

3,676 மீற்றர் உயரம் (12,060 அடி உயரம்) கொண்ட செமேரு இந்தோனேசியாவில் அடிக்கடி குமுறும் எரிமலையாகவும் ஜாவா தீவில் உள்ள மிக உயரமான மலையாகவும் உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து செமரு பலமுறை வெடித்துள்ளது, இதனால் நூற்றுக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment