கோப் குழு உள்ளிட்ட பாராளுமன்றக் குழுக் கூட்டங்கள் சில இவ்வாரம் - News View

Breaking

Monday, November 22, 2021

கோப் குழு உள்ளிட்ட பாராளுமன்றக் குழுக் கூட்டங்கள் சில இவ்வாரம்

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) மற்றும் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கள் மற்றும் ஒரு பாராளுமன்ற விசேட குழு இவ்வாரம் கூடவுள்ளன.

அதற்கமைய, எதிர்வரும் 24 ஆம் திகதி கல்லோயா பெருந்தோட்ட (தனியார்) நிறுவனம் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை (23) இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும் உயர் பதவிகள் பற்றிய குழுவும் கூடவுள்ளன.

எதிர்வரும் 24 ஆம் திகதி நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் தொழில்நுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஆகியவற்றின் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

மேலும், எதிர்வரும் 25 ஆம் திகதி வர்த்தக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடவுள்ளதுடன், எதிர்வரும் 26 ஆம் திகதி தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு மற்றும் அரசாங்க நிதி பற்றிய குழு என்பன கூடவுள்ளன.

No comments:

Post a Comment