இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல், குறைந்தும் உடலில் மாற்றங்கள் இருந்தால் இரத்தப் பரிசோதனைக்கான ஆலோசனையை பெற்றுக் கொள்ள வேண்டும் - சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் - News View

About Us

About Us

Breaking

Monday, November 22, 2021

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல், குறைந்தும் உடலில் மாற்றங்கள் இருந்தால் இரத்தப் பரிசோதனைக்கான ஆலோசனையை பெற்றுக் கொள்ள வேண்டும் - சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர்

காரைதீவு பிரதேசத்தில் தொடர்ச்சியாக மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால், டெங்கு நோய் வேகமாகப் பரவக்கூடிய அனர்த்த நிலைமை காணப்படுவதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அல்லது காய்ச்சல் குறைந்தும் உடலில் ஏதும் மாற்றங்கள் இருந்தாலும் இரத்தப் பரிசோதனைக்காக வைத்திய ஆலோசனையை பெற்றுக் கொள்ள வேண்டும். போதிய நீராகாரம் மற்றும் ஓய்வை உறுதி செய்யுங்கள். 

டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் உங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகருக்கு சுயமாகவே முன்சென்று ஒத்துழைப்பு வழங்குங்கள். டெங்கு நோய் மிகவும் ஆபத்தானது உங்களின் பாதுகாப்பு உங்களின் கரங்களில் என சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மழை நீர் தேங்கி நின்று நுளம்புகள் அதிகமாகி டெங்கு நோயைப் பரப்பி வருகிறது. தனியே சுகாதாரத் துறையினரால் மாத்திரம் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாது. 

பொதுமக்கள் தமது வீடு வளவுகளில் தினமும் 15 நிமிடங்களை நீர் தேங்கி நிற்கக்கூடிய பொருட்கள் மற்றும் இடங்களை அகற்றி துப்பரவு செய்வதில் கவனம் செலுத்துமாறும் வைத்திய அதிகாரி பிரதேச மக்களை அறிவுறுத்தியுள்ளார்.

பயன்படுத்தப்படாத வீடுகள், வளவுகள் மற்றும் கட்டட நிர்மாணம் நடைபெறும் இடங்களிலும் அவதானம் செலுத்துங்கள். கிணறுகள் மற்றும் நீர்த்தாங்கிகளை நுளம்புகள் நுழையாத வண்ணம் நுளம்பு வலைகளினால் மூடுங்கள். வீட்டு மாடிகள் மற்றும் கூரைப் பீலிகளில் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறும் அவர் சுட்டிக்காட்டியுன்னார்.

பாடசாலைகள் உட்பட அரச நிறுவனங்கள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு பொறுப்பாளர்களும் இவ்விடயத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment