பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை - News View

About Us

About Us

Breaking

Saturday, November 27, 2021

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை

பொலன்னறுவை மாவட்ட சிறுநீரக வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

12 பில்லியன் ரூபாய் செலவில் 16 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார அலுவலக பணியாளர்களின் குறைபாடு காரணமாக எதிர்பார்க்கப்பட்ட சேவையினை மேற்கொள்ள முடியாதுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கு பங்களிப்பு செய்துள்ளதுடன், கடந்த ஜூன் 11 ஆம் திகதி தற்போதய ஜனாதிபதியினால் வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இந்த வைத்தியசாலையில் 100 இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் இருந்த போதும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார அலுவலக பணியாளர்கள் இல்லாமையினால் 30 இயந்திரங்களை மாத்திரமே உபயோகிப்பதாகவும் வைத்திய சங்கத்தினர் தெரிவித்தனர்.

முதியோர் மற்றும் சிறுவர் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு 201 கட்டில்கள் இருந்த போதும் அலுவலக பணியாளர்கள் இல்லாமையினால் படுக்கை திறன் 25 ஆக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

குறித்த வைத்தியசாலைக்கு பணிப்பாளர் ஒருவர் உள்ளிட்ட எண்ணிக்கைக்கான ஒப்புதல் சுகாதார அமைச்சின் அனுமதி பெறப்பட்டுள்ள போதும் அதை சுகாதார அமைச்சு நிறைவேற்ற தவறியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அநுராதபுரம் நிருபர்

No comments:

Post a Comment