நாடளாவிய ரீதியில் மின்சாரத்தை துண்டித்து பழியை எம்மீது சுமத்த அரசாங்கம் முயற்சி : இலங்கை மின்சார சபை தலைவருக்கு ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன் - ரஞ்சன் ஜயலால் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 4, 2021

நாடளாவிய ரீதியில் மின்சாரத்தை துண்டித்து பழியை எம்மீது சுமத்த அரசாங்கம் முயற்சி : இலங்கை மின்சார சபை தலைவருக்கு ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன் - ரஞ்சன் ஜயலால்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

நாடளாவிய ரீதியில் மின்சாரத்தை துண்டிக்கும் சூழ்ச்சி அரசாங்கத்திடம் காணப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால், மின் துண்டிப்பு பழியை எம்மீது சுமத்த முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை மின்சார சபைக்கு முன்பாக நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுiகையில், தேசிய வளங்களை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோலியம், துறைமுகம் மின்சார ஆகிய ஒன்றிணைந்த கூட்டணி மற்றும் இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்கம் ஆகியன கூட்டாக இன்று (நேற்று) மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். அது போலவே, கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள துறைமுக வாயிலிலும், கொலன்னாவை மற்றும் சப்புகஸ்தையிலும் எமக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் குதித்துள்ளனர்.

ஆகவே, இன்று நாம் இவ்வாறு சத்தமிட்டு அரசாங்கத்துக்கு கூறுவது என்ன‍வெனில், நள்ளிரவில் அமெரிக்க நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்துள்ளீர்கள். இந்த உடன்படிக்கை நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் வெளிப்படுத்துங்கள். அது மாத்திரமல்லாமல், அந்த உடன்படிக்கையை கூடிய விரைவில் இரத்து செய்யுங்கள்.

உங்களுக்குத் தெரியாது, நாம் தற்போது செய்யும் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தை வேலை நிறுத்தப் போராட்டம் என நினைத்துக் கொண்டு அரசாங்கம் பயந்து நடுங்கிக் கொண்டுள்ளனர். இதற்காக அரசாங்க நிர்வாகிகளும், இலங்கை மின்சார சபை நிர்வாகிகளும் நீதிமன்றுக்கு சென்று நாங்கள் மேற்கொள்ளும் இந்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்த வேண்டுமென கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

நாங்கள் நீதிமன்றுக்கு தலை வணங்குகிறோம். ஆர்ப்பாட்டங்களை நடத்துவது ஜனநாயக உரிமையாகும். எம்மால் அவற்றை தடுக்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இன்னமும் இந்த நாட்டில் நீதி என்ற ஒன்று எஞ்சியுள்ளது.

அதனுடன் நின்று விடாத இலங்கை மின்சார சபை (இ.மி.ச.) நிர்வாகிகள், விடுமுறைகளை நீக்குகின்ற சுற்றுநிருபமொன்றை கடந்த 2 நாட்டுகளுக்கு முன்னர் வெளியிட்டனர். இன்று கொழும்புக்கு வந்துள்ள ஊழியர்கள் அனைவரும் மருத்துவ விடுமுறைகளை போட்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தை அரசுக்கு எதிரான செயற்பாடாக பெயரிட முடியும் என இலங்கை மின்சார சபை தலைவர் கூறியுள்ளார். நான் அவருக்கு ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். அமைச்சரவைக்கு தெரிவிக்காது, அமைச்சர்களுக்கு, 11 பங்காளிக் கட்சிகளுக்கும் தெரியப்படுத்தாது நள்ளிரவுவில் உடன்படிக்கைகளை செய்தார்களே. அது சட்டத்துக்கு உட்பட்டதா? அத்தியாவசிய சேவையாக துறைமுகம், பெற்றோலியம் ஆகிய துறைகளை ஜனாதிபதி அத்தியாவசிய சேவையாக வர்த்தமானியில் வெளியிட்டிருந்தார். எனினும், இலங்கை மின்சார சபையை ஏன் அத்தியாவசிய சேவையாக குறிப்பிடவில்லை?

கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத்தை சீனா திறந்து வைக்கும்போது உங்களது சிங்க கொடியை ஏற்ற முடியாது என சீன அதிகாரிகள் தெரிவித்தனர். சீன கொடி மாத்திரமே ஏற்றப்பட்டது. ஆகவே, நாம் கேட்க விரும்புகிறோம், நாட்டை நிர்வகிக்கும் இந்த சகோதரர்கள் இருவரும் ரகசியமாக இலங்கை மின்சார சபையையும் கெரவலப்பிட்டி மின் நிலையத்தையும் அமெரிக்காவுக்கு விற்றுவிட்டனரா என்ற சந்தேகம் எழுகிறது. இது பாரிய பிரச்சினை.

எங்களில் ஒருவர் ஒருவராக இறந்து போனாலும், வெற்றியை எட்டும் வரையிலும் இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்‍வோம்.

தற்போது மாபெரும் சூழ்ச்சி நடைபெறவுள்ளது. நாட்டில் மின்சாரத்தை துண்டித்து நாட்டு மக்களை அசெளகரியத்துக்கு உள்ளாக்கும் ‍ வேலையை செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. அதாவது, அரசாங்கம் மின்சாரத்தை துண்டித்து விட்டு, அதனை எமது தலையில் போடுவதற்கு அரசாங்கம் திட்மிட்டுள்ளது.

நாட்டின் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக நான் அறிகிறேன். இதுபோன்று மக்களுக்கு அசெளகரியங்களை விளைவிக்கும் காரியங்களில் நாம் ஈடுபட மாட்டோம் என நான் பொறுப்படன் கூறிக்கொள்கிறேன். நாம் இந்த போராட்டத்தை மக்களின் பக்கமாக இருந்துகொண்டே மேற்கொள்வோம் என்றார்.

No comments:

Post a Comment