இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கியுள்ள உலக வங்கி - News View

About Us

About Us

Breaking

Thursday, November 4, 2021

இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கியுள்ள உலக வங்கி

(இராஜதுரை ஹஷான்)

விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் சவாலை எதிர்கொள்ளல் உள்ளிட்ட செயற்திட்டங்களை செயற்படுத்துவதற்காக உலக வங்கி இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கியுள்ளது.

இந்நிதிதவி வழங்கும் ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது. இச்செயற்திட்டத்தின் மூலம் 16 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதியுதவி வழங்கும் ஒப்பந்தத்தில் அரசாங்கத்தின் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் ஆட்டிகல கைச்சாத்திட்டுள்ளதுடன், உலக வங்கி சார்பில் தெற்காசியாவிற்கான உலக வங்கியின் உப தலைவர் ஹார்ட்விக் ஹாக்பர் கைச்சாத்திட்டுள்ளார்.

இலங்கையின் விவசாயம் கிராமபுற மக்களின் பிரதான வாழ்வாதாரமாக காணப்படுகிறது. விவசாய வளங்கள் தேசிய மற்றும் சர்வதேச சந்தையினை இணைக்கும் வகையில் காணப்படுகிறது.

புரதான வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தாலும், மாகாண பிரிவுகளில் உள்ள வீதிகளில் 67 சதவீதமும், கிராமப் புறங்களில் 13 சதவீதமான வீதிகளும் இதுவரையில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

வீதி விபத்து உயிரிழப்புக்களில் தெற்காசியாவில் இலங்கை முன்னிலை வகிக்கிறது. இலங்கையில் வீதி விபத்தினால் வருடத்திற்கு சுமார் 3 ஆயிரம் மரணங்கள் பதிவாகுகின்றன.

கிராமபுற பகுதிகளில் வாழும் மக்களை சுகாதாரம், கல்வி சேவைகள் மற்றும் பொருளாதார வாய்ப்புக்களுடன் இணைக்க வேண்டுமாயின் இலங்கையில் தடையற்ற மற்றும் பாதுகாப்பான சாலை வலையமைப்பு அவசியமாகும் என தெற்காசியாவிற்கான உலக வங்கியின் துணைத்தலைவர் ஹார்ட்விக் ஷாக்பர் தெரிவித்துள்ளார்.

அளவிடப்பட்ட வீதி முதலீடுகள் இலங்கையின் மனித மூலதனத்தை துரிதப்படுத்தும், அது நிலையான மற்றும் சிறந்த பொருளாதார வளர்ச்சிக்க வழிவகுக்கும் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கிடைக்கப் பெற்ற நிதியுதவியை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கும் செயற்திட்டம் அரசாங்கத்தின் தேசிய அபிவிருத்தி மூலோபாயத்தின் முக்கிய முயற்சியான 1 இலட்சம் கிராமிய வீதி அபிவிருத்திக்க வலு சேர்க்கும்.

இச்செயற்திட்டம் நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சினால் செயற்படுத்தப்படும். திட்ட மேற்பார்வை தொடர்பில் தேசிய வழிநடத்தல் குழு நியமிக்கப்படும்.

No comments:

Post a Comment