வடமராட்சி கடற்கரை பகுதியில் இரண்டு சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடமராட்சி மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதியில் இன்றையதினம் (சனிக்கிழமை) குறித்த இரு சடலங்களும் கரையொதுங்கியுள்ளன.
இரு சடலங்களும் அடையாளம் காணப்படாத நிலையில், அவற்றை அடையாளம் காணும் முயற்சியிலும் மேலதிக நடவடிக்கைகளிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். நிருபர் ரமணன்
No comments:
Post a Comment