கோதுமை மாவின் விலை இன்று (சனிக்கிழமை) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக சந்தை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை பால்மா, எரிவாயு, மரக்கறிகளுக்கு சந்தையில் ஏற்கனவே தட்டுப்பாடு நிலவுகின்றது. இந்த பட்டியலில் தற்போது கோதுமை மாவும் இணைந்துள்ளது.
நாட்டில் பல்வேறு பகுதிகளில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்களும் நுகர்வோரும் கூறுகின்றனர்.
இதனிடையே, தமது உற்பத்திக்கான கோதுமை மாவை பெறுவதில் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளதாக பேக்கரி உரிமையாளர்களும் உணவக உரிமையாளர்களும் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment