சதொசவில் அரிசி, சீனியை மாத்திரம் கொள்வனவு செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளமை சட்டத்திற்கு முரணானது - சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா - News View

About Us

About Us

Breaking

Friday, November 5, 2021

சதொசவில் அரிசி, சீனியை மாத்திரம் கொள்வனவு செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளமை சட்டத்திற்கு முரணானது - சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா

(இராஜதுரை ஹஷான்)

லங்கா சதொச விற்பனை நிலையத்தில் அரிசி, சீனி ஆகிய பொருட்களுடன் ஏனைய அத்தியாவசியப் பொருட்களையும் பெற வேண்டும். அரிசி, சீனி ஆகியவற்றை மாத்திரம் நுகர்வோர் கொள்வனவு செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளமை சட்டத்திற்கு புறம்பானது என நீதியமைச்சின் ஆலோசகர், ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர் .டி. சில்வா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரச விற்பனை நிலையங்களில் பொருட்களை நிபந்தனை அடிப்படையில் விற்பனை செய்வது முற்றிலும் தவறானது. லங்கா சதொச விற்பனை நிலையத்தில் அரிசி, சீனி ஆகிய பொருட்களை பெறும் போது ஏனைய அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளமை சட்டத்திற்கு முரணானது.

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்தின் 11ஆம் அத்தியாயத்தில் அரச விற்பனை நிலையத்தில் உள்ள பொருட்களை நுகர்வோருக்கு தடையின்றி வழங்குதல் அவசியமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே லங்கா சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களை நிபந்தனை அடிப்படையில் வழங்க முடியாது.

லங்கா சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் நிபந்தனைகளுக்குட்பட்டு அசௌகரியங்களுக்குள்ளாகியிருப்பார்களாயின் அவர்கள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் முறையிடலாம், நுகர்வோர் அதிகார சபை அவ்வாறான முறைப்பாடு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

நுகர்வோர் லங்கா சதொச விற்பனை நிலையத்தில் அரிசி மற்றும் சீனி ஆகிய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் போது பிரதான 5 அத்தியாவசிய பொருட்களையும் உடன் கொள்வனவு செய்ய வேண்டும். சீனி, அரிசி ஆகிய பொருட்களை மாத்திரம் தனித்து கொள்வனவு செய்ய முடியாது.

அத்துடன் ஒருவர் 5 கிலோ கிராம் சீனியை, 5 கிலோ கிராம் அரிசியை மாத்திரம் பெற முடியும் என வர்த்தகத்துறை அமைச்சர் கடந்த 3ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment