எத்தியோப்பியாவில் அவசரகால நிலை அறிவிப்பு - News View

Breaking

Wednesday, November 3, 2021

எத்தியோப்பியாவில் அவசரகால நிலை அறிவிப்பு

எத்தியோப்பியாவின் அமைச்சரவை உடனடியாக நாடு தழுவிய அவசரகால நிலையை செவ்வாயன்று அறிவித்துள்ளது.

அதேநரம் தலைநகரையும் தம்மையும் பாதுகாக்கத் தயாராகுமாறு குடிமக்களுக்கு அடிஸ் அபாபாவில் உள்ள அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியான டைக்ரேயில் இருந்து போராளிகள் நகரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்குடன் அணிவகுத்து வருவதனால் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய நாட்களில் டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி (TPLF)பல நகரங்களைக் கைப்பற்றியதாகக் கூறியதைத் தொடர்ந்து அவசரகாலச் சட்டம் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் வடக்கு எத்தியோப்பியாவின் பெரும்பகுதி தகவல் தொடர்பு முடக்கத்தில் உள்ளது மற்றும் பத்திரிகையாளர்களுக்கான அணுகல் தடைசெய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment