பம்பலப்பிட்டி பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் : கைதான சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு - News View

Breaking

Wednesday, November 24, 2021

பம்பலப்பிட்டி பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் : கைதான சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு

(எம்.எப்.எம்.பஸீர்)

பம்பலப்பிட்டி 'போரா' முஸ்லிம் பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடாத்தியதாக கூறி, கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் விளக்கமறியலை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நீடித்தது.

கடந்த 9 ஆம் திகதி முற்பகல் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதுடன், அதனை நடாத்திய சந்தேக நபரை மனிதப் படுகொலைக்கு முயற்சித்ததமை தொடர்பில் பொலிஸார் கைது செய்திருந்த நிலையில், சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே அவரது விளக்கமறியல் காலத்தை கொழும்பு மேலதிக நீதிவான் சலனி பெரேரா இவ்வாறு நீடித்தார்.

பம்பலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த உஸ்மான் அப்பாஸ் கென்போய் எனும் போரா சமூகத்தைச் சேர்ந்த நபரின் விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment