ரிஷாட் பதியுதீன் எம்.பியின் சகோதரர் சுமார் 7 மாதங்களின் பின் விடுதலை - News View

About Us

About Us

Breaking

Monday, November 15, 2021

ரிஷாட் பதியுதீன் எம்.பியின் சகோதரர் சுமார் 7 மாதங்களின் பின் விடுதலை

ரிஷாட் பதியுதீன் எம்.பியின் சகோதரர் ரியாஜ் பதியுதீன், கடுமையான நிபந்தனைகளின் கீழ் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக இவ்வருடம் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் CID யினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளை நடத்திய தற்கொலைப் படைத் தீவிரவாதிகளுக்கு தாங்கள் உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்த ரிஷாட் பதியுதீன் மற்றும் ரியாஜ் பதியுதீன் சகோதரர்கள், இந்த சமீபத்திய கைது மற்றும் தடுப்புக் காவலின் மூலம் தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற உத்தரவைக் கோரி இரண்டு தனித்தனியான அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் சிறுமி ஹிஷாலினி மரண வழக்கு ஆகிய இரு வழக்குகள் தொடர்பிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே மற்றும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றங்களால் கைது செய்யப்பட்டு சுமார் 6 மாதங்களின் பின் ரிஷாட் பதியுதீன் கடந்த மாதம் (14) பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சுமார் 7 மாதங்களின் பின்னர் ரியாஜ் பதியுதீன் இன்று (15) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் சார்பில் விடுக்கப்பட்ட பிணை மனு உச்ச நீதிமன்றில் இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, அவரை கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்தது.

No comments:

Post a Comment