தரம் 6 - 9 வரையான மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் பாடசாலை ஆரம்பம் - கல்வி அமைச்சர் தினேஷ் தெரிவிப்பு - News View

Breaking

Monday, November 15, 2021

தரம் 6 - 9 வரையான மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் பாடசாலை ஆரம்பம் - கல்வி அமைச்சர் தினேஷ் தெரிவிப்பு

பாடசாலைகளின் ஏனைய தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதமான இன்றைய தினத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்க பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு (தரம் 1 - 5) கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் 25ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது

அதனைத் தொடர்ந்து தரம் 10 - 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 08ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய தற்போது தரம் 6 - 9 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளே தற்போது ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment