வெள்ளிக்கிழமைகளில் அனைத்து தனியார் வகுப்புகள் மற்றும் மதரசாக்களுக்கு விடுமுறை வழங்க காத்தான்குடி நகர சபை தீர்மானித்துள்ளது.
தனியார் வகுப்புகள் மற்றும் குர்ஆன் மத்ரஸாக்களை ஒழுங்குபடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் புதன்கிழமை (29) நகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.
நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. பிரதி வெள்ளிக்கிழமைகளில் அனைத்து தனியார் வகுப்புகள் மற்றும் மதரசாக்களுக்கு விடுமுறை.
2. நேர ஒழுங்கு - காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை மாத்திரமே தனியார் வகுப்புகள் மதரசாக்கள் நடாத்தப்பட வேண்டும். O/L, A/L ஆண் மாணவர்களுக்கு மாத்திரம் மாலை 8 மணி வரை தனியார் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படுவர்.
3. தனியார் வகுப்புகள் மற்றும் மதரஸாக்களை நடத்துபவர்கள் மாணவர்களது சீருடையை ஒழுங்குபடுத்த வேண்டும்.
4. மாணவர்களுக்கான வாகன தரிப்பிடத்தினை பொறுப்பான ஒருவரை நியமித்து ஒழுங்குபடுத்துவதுடன் கண்காணிக்க வேண்டும்.
5. மாணவர்களுக்கு தேவையான உள்ளக சுகாதார வசதியினை ஏற்படுத்திக் கொடுத்தல்.
6. வருட இறுதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் போது தனியார் வகுப்புகள் மற்றும் மதரஸா மாணவர்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும்.
மேற்படி தீர்மானங்கள் அனைத்தும் எதிர்வரும் 07.11.2025 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
இக்கலந்துரையாடலில் நகர சபை உறுப்பினர்கள், நகர சபையின் செயலாளர் திருமதி ரினோஷா முப்லி மற்றும் தனியார் வகுப்பு நடாத்துனர்கள், குர்ஆன் மதுரசா அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், நகர சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
பஹாத் ஜூனைத்
.jpg)
No comments:
Post a Comment