24 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட ஐஸ் போதைப் பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது - News View

Breaking

Monday, November 15, 2021

24 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட ஐஸ் போதைப் பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது

3.1 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் (Methamphetamine) 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் இன்று (15) முற்பகல் தலைமன்னார் மணல் குன்று பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் குறித்த ஐஸ் போதைப் பொருளுடன் 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் பயணித்த ஒரு டிங்கி படகையும் கைப்பற்றியுள்ளனர்.

கடற்படையினர் தலைமன்னார் மணல் திட்டில் ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்றை அவதானித்து சோதனை செய்த போது, சந்தேகநபர்கள் டிங்கி படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 3.1 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப் பொருளின் தெரு மதிப்பு ரூ. 24 மில்லியன் இற்கும் அதிகம் என நம்பப்படுகிறது.

சந்தேகநபர்கள் பேசாலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment