கீழ் கடுகண்ணாவை வீதி தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் - News View

Breaking

Monday, November 15, 2021

கீழ் கடுகண்ணாவை வீதி தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும்

கீழ் கடுகண்ணாவை வீதி தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்குமென கேகாலை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கடுகண்ணாவை பகுதியிலான பாதையின் ஸ்திரமற்ற நிலை காணப்பட்டு வந்தது. 

இதன் காரணமாக கொழும்பு - கண்டி வீதியின் (A01) கீழ் கடுகண்ணாவை பகுதி போக்கு வரத்துக்கு மூடப்பட்டிருந்த நிலையில், அதனை மீளத் திறப்பது தொடர்பில் இன்று (15) தீர்மானம் எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், புவிச்சரிதவியல் நிபுணர்கள், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் உள்ளிட்டோர், இன்று (15) காலை குறித்த பகுதிக்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டதோடு, அதனைத் தொடர்ந்து கேகாலை மாவட்ட செயலாளர் மற்றும் மாகாண ஆளுநருடனும் இது தொடர்பில் கலந்துரையாடினர்.

இதன்போது, இன்று (15) பெறப்பட்ட மேலதிக அவதானிப்புகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில, நிலத்தடியில் பயணிக்கும் நீர் மற்றும் தேங்கியுள்ள நீரை அகற்றும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ். வீரசூரிய தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment