பெரும்போக விளைச்சலுக்கு தேவையான சேதன பசளை உரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் - News View

Breaking

Tuesday, October 12, 2021

பெரும்போக விளைச்சலுக்கு தேவையான சேதன பசளை உரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்

(இராஜதுரை ஹஷான்)

பெரும்போக விளைச்சலுக்கு தேவையான சேதன பசளை உரம் பிரதேச விவசாய சேவை காரியாலயத்தின் ஊடாக விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசிய மட்டத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட சேதன பசளை உரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய சேவைகள் திணைக்கள ஆணையாளர் ஜெனரால் ஏ.எச்.எம்.எல் அபேரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பெரும்போக பயிர்ச் செய்கைக்கு தேவையான சேதன பசளை உரம் நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து விவசாய சேவை காரியாலயத்தின் ஊடாக விநியோகிக்கப்படுகின்றன. தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சேதன பசளை இவ்வாறு விநியோகிக்கப்படும்.

பெரும்போக விவசாய நடவடிக்கைக்கான சேதன பசளை உரம் தட்டுப்பாடில்லாமல் விநியோகிக்கப்படும். விவசாயத்திற்கும், மண் வளத்திற்கும் பாதிப்பு ஏற்படும் வகையிலான உரம் ஒருபோதும் இறக்குமதி செய்யப்பட மாட்டாது.

விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரத்தை பிரதேச விவசாய சேவை காரியாலயத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.

உரத்தை பெற்றுக் கொள்வதில் ஏதேனும் சிக்கல் நிலை காணப்படுமாயின் விவசாயிகள் பிரதேச பிரிவு செயலகத்தில் உள்ள விவசாய பிரிவுடன் தொடர்பு கொண்டு தீர்வு பெற்றுக் கொள்ளலாம். என்றார்.

No comments:

Post a Comment