அப்துல் ரசாக் குர்னாவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு - News View

Breaking

Thursday, October 7, 2021

அப்துல் ரசாக் குர்னாவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

தன்சானிய எழுத்தாளரான அப்துல் ரசாக் குர்னாவுக்கு (Abdulrazak Gurnah) 2021 ஆம் ஆண்டு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இப்பரிசை பெறும் இரண்டாவது கறுப்பினத்தவர் இவர் என, நோபல் பரிசு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு முன்னர் 1993 ஆம் ஆண்டு, டொனி மொரிசன் இப்பரிசை பெற்றிருந்ததாக, அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

'காலனித்துவத்தின் விளைவுகளினாலான சமரசமற்ற, இரக்கமற்ற ஊடுருவல்' என்பது தொடர்பான அவரது எழுத்துகளுக்கு இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக அவருக்கு 1.14 மில்லியன் டொலர் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 73 வயதான அப்துல் ரசாக் குர்னா, 10 நாவல்களை எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment