பாகிஸ்தானில் நில நடுக்கம் : 20 பேர் உயிரிழப்பு, 150 க்கும் மேற்பட்டோர் காயம் - News View

Breaking

Wednesday, October 6, 2021

பாகிஸ்தானில் நில நடுக்கம் : 20 பேர் உயிரிழப்பு, 150 க்கும் மேற்பட்டோர் காயம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்தனர். 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களில் 5 பேர் குழந்தைகள் என்பதும் தெரியவந்திருக்கிறது.

பலுசிஸ்தானின் ஹர்னய் பகுதியை மையமாகக் கொண்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.9 அளவாகப் பதிவாகி இருக்கிறது.

குவெட்டா நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஹர்னயில், ஏராளமான நிலக்கரிச் சுரங்கங்கள் இருக்கின்றன.

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய பலுசிஸ்தான் உள்துறை அமைச்சர், ஹர்னய் பகுதியில் பெருத்த சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் அவசரகால மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment