லங்கா சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற வெள்ளைப்பூடு மோசடி தொடர்பில் அதனைக் கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பம்பலப்பிட்டி வர்த்தகரின் மகன் (25) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
நேற்று (22) கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், சதொச நிறுவனத்திற்கு ஒரு கோடி 17 இலட்சத்து 19 ஆயிரத்து 520 ரூபாவை (ரூ. 11,719,520) மோசடி செய்தமை தொடர்பில் போலி ஆவணங்களை தயாரித்தல் மற்றும் திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
சந்தேகநபரை இன்று (23) வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வர்த்தகர் மற்றும் சதொச நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட 5 பேரும் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
No comments:
Post a Comment