சுசந்திகா ஜயசிங்கவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள பொறுப்பு - News View

Breaking

Tuesday, October 5, 2021

சுசந்திகா ஜயசிங்கவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள பொறுப்பு

எம்.எம்.சில்வெஸ்டர்

இலங்கை விளையாட்டு வீர், வீராங்கனைகளின் மேலாண்மை ஆற்றல்களை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை கண்காணித்தலுக்காக விளையாட்டுத்துறை அமைச்சின் ஆலோசகராக சுசந்திகா ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது 55 ஆவது வயதை எட்டும் வரையில் நிரந்தர சேவையாளராக சுசந்திக்கா ஜயசிங்க விளையாட்டுத்துறை அமைச்சில் கடமையாற்றவுள்ளார். இவரின் இந்த நியமனமானது கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியிலான மெய்வல்லுநர் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வெல்வதற்கான அதிகப்படியான வாய்ப்புக்கள் காணப்படுவதன் காரணமாக சுசந்திக்காவுக்கு இந்தப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

ஆற்றல், திறமைகள் மிக்க வீர, வீராங்கனைகளை தொடர்ந்தும் விளையாட்டுத் துறையில் தக்க வைத்துக் கொள்வதற்கும், அவர்களது ஆற்றல், திறமைகளை மேலும் வளர்த்தெடுப்பதற்குத் தேவையான தைரியத்தை அதிகரிக்கச் செய்வதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

எதிர்வரும் 2024, 2028, 2032 ஆகிய ஒலிம்பிக் போட்டிகளை இலக்காகக் கொண்டு, இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்தவுள்ளதால் சுசந்திக்கா ஜயசிங்க தனது 55 ஆவது வயது வரை சேவையாற்ற இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

2000 இல் நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திக்கா ஜயசிங்க இதற்கு முன்னர் விளையாட்டுத் துறை அமைச்சின் ஆலோசகராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment