இஸ்ரேலில் பூஸ்டர் தடுப்பூசி பெறாதவருக்கு கட்டுப்பாடு - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 5, 2021

இஸ்ரேலில் பூஸ்டர் தடுப்பூசி பெறாதவருக்கு கட்டுப்பாடு

இஸ்ரேலில் பூஸ்டர் தடுப்பூசி போடா விட்டால் பல இடங்களில் நுழைய மக்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்துள்ளது.

பூஸ்டர் தடுப்பூசியை வேகமாக போட்டுக் கொள்ளுமாறும் குடிமக்களை அது கேட்டுக் கொண்டது. இனி பூஸ்டர் தடுப்பூசி போட்டவர்கள் மட்டும்தான் உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்ற பொது இடங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இஸ்ரேல் ஜூலை மாதம் முதலே பூஸ்டர் தடுப்பூசித் திட்டத்தை ஆரம்பித்தது. 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி போட அது அனுமதி வழங்கியது. 

பூஸ்டர் தடுப்பூசி போட்டவர்கள்தான் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு கிரீன் பாஸ் என்னும் அட்டை வழங்கப்படும் என்றும் இஸ்ரேல் கூறியது.

கிரீன் பாஸ் அட்டையை வைத்துத்தான் பொது இடங்களுக்குள் நுழைய முடியும். 9.4 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இஸ்ரேலில் சுமார் 37 வீதத்தினர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

No comments:

Post a Comment