15 - 19 வயதுக்கிடைப்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட வேண்டும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

Breaking

Tuesday, October 5, 2021

15 - 19 வயதுக்கிடைப்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட வேண்டும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(எம்.மனோசித்ரா)

நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் வினைத்திறனாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதே போன்று 15 - 19 வயதுக்கிடைப்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளும் துரிதமாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை வலியுறுத்துவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் மேலும் தெரிவிக்கையில், தற்போதும் கொவிட் பரவல் சரியான முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. சிறுவர்கள் மத்தியிலும் தொற்று வியாபித்துக் காணப்படுகிறது. சிறுவர்கள் மத்தியில் அதிக மரணங்களையும் பதிவாகச் செய்திருக்கிறது.

எனவே இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவும் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்காகவும், ஐந்தாம் அலையிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கும் இந்த தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment