நாட்டு மக்கள் மீது சுமைகளை சுமத்தவில்லை என்கிறார் அமைச்சர் டலஸ் - News View

Breaking

Wednesday, October 20, 2021

நாட்டு மக்கள் மீது சுமைகளை சுமத்தவில்லை என்கிறார் அமைச்சர் டலஸ்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் பாரிய டொலர் நெருக்கடி காணப்படுகின்ற போதிலும் மக்களுக்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் எந்தவொரு நிலைமையின் கீழும் பிரஜைகள் மீது அனைத்து சுமைகளையும் சுமத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது இதனைத் தெரிவித்த அவர், நுகர்வோர் மீது சுமையை சுமத்துவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதில்லை.


உலகலாவிய ரீதியில் அபிவிருத்தியடைந்த நாடுகள் கூட கொவிட் தொற்றினால் நெருக்கடிகளுக்கு மத்தியில் கடும் நிபந்தனைகளுடனேயே ஆட்சியை முன்னெடுத்துச் செல்கின்றன. இவ்வாறு அரசாங்கம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை பிரஜைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேபோன்று பிரஜைகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும். அதனடிப்படையில் நாட்டு பிரஜைகள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை அரசாங்கம் நன்கு புரிந்துகொண்டுள்ளது.

நாட்டில் பாரிய டொலர் நெருக்கடி காணப்படுகின்ற போதிலும் மக்களுக்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் எந்தவொரு நிலைமையின் கீழும் பிரஜைகள் மீது அனைத்து சுமைகளையும் சுமத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment