இலங்கையில் எவ்வித இன மத பாகுபாடுகளும் இல்லையாம் என்கிறார் அமைச்சர் ரமேஷ் பத்திரண - News View

Breaking

Wednesday, October 20, 2021

இலங்கையில் எவ்வித இன மத பாகுபாடுகளும் இல்லையாம் என்கிறார் அமைச்சர் ரமேஷ் பத்திரண

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் அனைத்து இன மக்களும் பாதுகாப்புடன் வாழக் கூடிய சூழலை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. அதில் எவ்வித இன மத பாகுபாடுகளும் இல்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளமை தொடர்பில் செவ்வாய்கிழமை (19) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் கேட்கப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் அனைத்து இன மக்களும் பாதுகாப்புடன் வாழக் கூடிய சூழலை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் என அனைத்து இன மக்களும் கௌரவத்துடன் வாழக் கூடிய நிலைமையும் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் துரதிஷ்டவசமாக கடந்த 2019 ஆம் ஆண்டு எதிர்பாராத சம்பவங்கள் இடம்பெற்றன. எனினும் அந்த சந்தர்ப்பத்திலும் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

அதே போன்று அனைத்து இன மக்களும் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழக் கூடிய சூழல் தொடர்ந்தும் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment