கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கத் தீர்வை இல்லா கொள்வனவுக்கு அனுமதி - News View

Breaking

Thursday, October 7, 2021

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கத் தீர்வை இல்லா கொள்வனவுக்கு அனுமதி

கொவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கும்போதே, சுங்கத் தீர்வை இல்லாத (Duty-Free) கொள்வனவுகளை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதன்படி விமான நிலையத்திற்கு வந்திறங்கும் (முழுமையாக தடுப்பூசி பெற்ற) சுகாதார அலுவலகத்தினால் தடுப்பூசி சான்றிதழில், அனுமதி பொறிக்கப்பட்ட பயணிகளுக்கு சுங்கத் தீர்வை இல்லாத கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இக் கொள்வனவுகளை பயணிகள் வேறொரு நாளில் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

No comments:

Post a Comment