நாம் அங்கம் வகித்த அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும் : மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவில் நடத்துமாறு வலியுறுத்துகிறார் ரவூப் ஹக்கீம் - News View

Breaking

Thursday, October 7, 2021

நாம் அங்கம் வகித்த அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும் : மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவில் நடத்துமாறு வலியுறுத்துகிறார் ரவூப் ஹக்கீம்

காலம் கடந்துள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவில் நடத்தி ஆளுனர்களின் அதிகாரத்தில் உள்ள மாகாணங்களுக்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்க அரசாங்கம் துரித கவனம் செலுத்த வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்தி 13 ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் செயற்பாடுகளை துரித்தப்படுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), ஊழியர் சகாய நிதிய (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) மற்றும் ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவசர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், மாகாண சபைகள் தேர்தல் காலம் தாழ்த்தப்படுவதற்கு முன்னைய, நாம் அங்கம் வகித்த அரசாங்கமும் பொறுப்புக் கூறியாக வேண்டும். அப்போது எல்லை நிர்ணயங்கள் என்ற காரணிகளை கையில் எடுத்துக் கொண்டு காலத்தை கடத்தியது மட்டுமல்லாது இறுதியாக இவற்றை கையாண்ட அமைச்சரே எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களித்த மிகப்பெரிய நகைச்சுவையும் அப்போது இடம்பெற்றது.

ஆகவே இந்த அரசாங்கம் மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கு கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment