பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவிற்கு சொந்தமான கட்சியை 'ஐக்கிய மக்கள் சக்தி' என பெயரை மாற்றி, அக்கட்சியின் முழு உரிமையும் மாற்றப்பட்டுள்ளதால், இது தொடர்பான பரிவர்த்தனைகள் நிறைவு பெற்றுள்ளதால், அதற்கு உரிமை கோர அவருக்கு எந்த உரிமையும் இல்லையென ஐ.ம.ச. கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஒரு காணியை விற்ற பிறகு அதன் பத்திரம் என்னுடையது என்று தொடர்ந்து வாதிடுவது முட்டாள்தனமான செயல் என்று திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டுகிறார்.
20ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிப்பது என, கட்சி முடிவெடுத்த போதிலும் அதற்கு டயானா கமகே ஆதரவளித்தமை தொடர்பில் விசாரணைக்கு அழைத்த நிலையில், அதில் முன்னிலையாகாமை தொடர்பில், கட்சியின் ஒழுக்காற்று குழுவினால் அவரை கட்சியிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது கொண்ட நம்பிக்கை காரணமாகவே 20ஆவது திருத்த்திற்கு ஆதரவளித்ததாக டயனா கமகே எம்.பி அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment