பாடசாலை ஆரம்பித்ததும் இ.போ.ச. வினால் புதிய மாணவர் பஸ் சேவை - News View

About Us

About Us

Breaking

Sunday, October 10, 2021

பாடசாலை ஆரம்பித்ததும் இ.போ.ச. வினால் புதிய மாணவர் பஸ் சேவை

நாடு முழுமையாக திறக்கப்பட்டு பாடசாலைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய பாடசாலை பஸ் சேவை ஆரம்பிக்கப்படுமென போக்கு வரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இந்த பஸ் சேவையானது, இலங்கை போக்கு வரத்து சபையினால் முன்னெடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

மாணவர்களின் வீடுகளுக்கு அருகிலிருந்து பாடசாலைகளுக்கு அழைத்து செல்லப்படும் மாணவர்கள் பாதுகாப்பாக பாடசாலையிலிருந்து மீண்டும் வீடு திரும்ப முடியுமென அவர் தெரிவித்தார்.

மிக நம்பகமான மற்றும் பாதுகாப்பான பாடசாலை பஸ் சேவையை நிறுவுவவதை நோக்கமாகக் கொண்டு இதனை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், பாடசாலைகளை திறப்பதற்கான கட்டங்கள் மற்றும் முறைமைகள் தொடர்பில் ஆராயப்படுமெனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம் கூறினார்.

No comments:

Post a Comment