இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு - News View

Breaking

Tuesday, October 5, 2021

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

இவ்வாண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசை 3 விஞ்ஞானிகள் பெறுகிறார்கள்.

உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்றிலிருந்து (04) வருகிற 11 ஆம் திகதி வரை அறிவிக்கப்படுகிறது.

அந்த வகையில், 2021 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து இன்று (05) அறிவிக்கப்பட்டது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

புவியின் காலநிலையில் மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் வெப்பமடைதல் கணித்தல் ஆகியவற்றிற்காக சியுகுரோ மனாபே (அமெரிக்கா), கிளாஸ் ஹாசில்மேன் (ஜேர்மனி) மற்றும் ஜார்ஜியோ பாரிசி (இத்தாலி) ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது.

முன்னதாக, நேற்று அமெரிக்காவின் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment