இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களின் வீசா காலம் மேலும் நீடிப்பு - News View

Breaking

Tuesday, October 5, 2021

இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களின் வீசா காலம் மேலும் நீடிப்பு

தற்போது இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டவருக்கான அனைத்து வகையான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் ஒக்டோபர் 07ஆம் திகதியிலிருந்து நவம்பர் 06ஆம் திகதி வரை மேலும் 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் காலவதியாகும் வீசாக்களுக்கு அக்காலப் பகுதிக்கான வீசாக்கட்டணம் மாத்திரம் அறவிடப்படும் என்பதுடன், அதற்காக எவ்வித தண்டப்பணமும் அறிவிடப்படாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலா வீசாக்களை கொண்டிருப்பவர்கள், வீசாக்களை மேலொப்பமிடுவதற்கு,

eservices.immigration.gov.lk/vs எனும் இணையத்தளத்திற்கு சென்று கட்டணத்தை செலுத்தி, Onine வீசாக்களை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 07ஆம் திகதிக்கு முன்னர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு உத்தேசிக்கும் நிலையில், உரிய வீசாக் கட்டணத்தை 2021 நவம்பர் 07ஆம் திகதிக்கு முன்னர் விமான நிலையத்தில் செலுத்தி நாட்டை விட்டு வெளியேற முடியும்.

2021 நவம்பர் 07ஆம் திகதிக்கு முன்னர் பயணத்தடை ஒழுங்குகளை பேணி பத்தரமுல்லை பிரதான அலுவலகத்திற்கு வந்து உரிய வீசா கட்டணத்தை செலுத்தி வீசாகை கடவுச்சீட்டில் மேலொப்பமிட்டுக் கொள்ள முடியும்.

வதிவிட வீசாக்களை வைத்திருப்பவர்களுக்கான அறிவுறுத்தல்கள்

2021 ஒக்டோபர் 08 ஆம்‌ திகதி முதல்‌ 2021 நவம்பர் 08ஆம்‌ திகதி வரையிலான வீசா நீடிப்பு அனைத்து வதிவிட வீசாக்களை வைத்திருப்பவர்களுக்கும்‌ ஏற்புடையதாகும்‌.

அத்‌திகதிக்கு முன்னர்‌ விசாவை நீடித்துக்கொள்வதற்கு கடமை நாட்களில்‌ மு.ப. 8.00 முதல்‌ பி.ப. 3.00 வரை 070 7101050 எனும்‌ தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து நாளொன்றையும்‌ நேரத்தையும்‌ ஒதுக்கிக்கொண்டு 2021 நவம்பர்‌ 07 ஆம்‌ திகதிக்கு முன்னர்‌ பத்தரமுல்லை அலுவலகத்திற்கு வருகைத்தந்து உரிய வீசாக்‌ கட்டணத்தைச்‌ செலுத்தி வீசாவை மேலொப்பமிட்டுக் கொள்ள முடியும்.

மேலதிக தகவல்களுக்கு

No comments:

Post a Comment