கொவிட் தொற்று 2022 இலும் நீடிக்கக்கூடும் : எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, October 22, 2021

கொவிட் தொற்று 2022 இலும் நீடிக்கக்கூடும் : எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

கொவிட்-19 நோய்ப் பரவல் எதிர்வு கூறப்பட்டதை விட இன்னும் ஓராண்டுக்கு நீடிக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஏழ்மையான நாடுகளுக்குப் போதுமான தடுப்பு மருந்துகள் கிடைக்காததால் அத்தகைய நிலை ஏற்படும் என்று அது குறிப்பிட்டது.

கொவிட் நெருக்கடி 2022ஆம் ஆண்டு வரை தொடரக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் மூத்த தலைவர் புரூஸ் அய்ல்வர்ட் கூறினார்.

ஆபிரிக்க மக்கள் தொகையில் 5 வீதத்திற்கும் குறைவானவர்களே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதர நாடுகளில் கிட்டத்தட்ட 40 வீதத்தினர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, தேவையுள்ள நாடுகளுக்குப் பிரிட்டன் சுமார் 10 மில்லியன் முறை போடக்கூடிய தடுப்பு மருந்தை விநியோகம் செய்துள்ளது. அது 100 மில்லியன் முறை போடக்கூடிய தடுப்பு மருந்தை விநியோகிக்க இலக்குக் கொண்டுள்ளது.

கொவக்ஸ் திட்டத்தின் கீழ் இவ்வாண்டு இறுதிக்குள் 2 பில்லியன் முறை போடக்கூடிய தடுப்பு மருந்துகள் விநியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இதுவரை 371 மில்லியன் முறை போடக்கூடிய தடுப்பு மருந்துகளே விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

“வளர்ந்த நாடுகள் தடுப்பு மருந்து பெறுவதற்கான தங்களின் வாய்ப்பை குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும், அப்போதுதான் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு முன்னுரிமை வழங்க முடியும்” என அய்ல்வர்ட் தெரிவித்துள்ளார்.

“நாம் கொடுத்த வாக்கின் பாதையில் செல்லவில்லை. நாம் இந்த நடவடிக்கையை விரைவுப்படுத்த வேண்டும் அல்லது பெருந்தொற்று மேலும் ஒரு வருடத்திற்கு நீண்டு விடும்” என்று அவர் எச்சரித்தார்.

No comments:

Post a Comment