127 வயதில் முதியவர் மரணம் : கின்னஸில் இடம்பெற முயற்சி - News View

About Us

About Us

Breaking

Friday, October 1, 2021

127 வயதில் முதியவர் மரணம் : கின்னஸில் இடம்பெற முயற்சி

எரித்ரிய நாட்டைச் சேர்ந்த 127 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நடபெய் டின்சிவ் என்ற அந்த ஆடவர் இதுவரை வாழ்ந்த மிக வயதானவர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பார் என்று அவரது குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

‘பொறுமை, பெருந்தன்மை மற்றும் மகிழ்ச்சியான வாழ்வே’ அவர் நீண்ட காலம் உயிர்வாழ்ந்ததற்குக் காரணம் என்று அவரது பேரரான சேரே நடபே பி.பி.சி டிக்ரின்யா செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

நடபெய் தனது ஊரான சுமார் 300 பேர் மாத்திரமே வசிக்கும் அசேபா என்ற கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை அமைதியாக உயிர் நீத்தார் என்று குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.

அவரது பிறப்புச் சான்றிதழ் உட்பட தேவாலயத்தின் பதிவுகள் அடிப்படையில் அவர் 1894 ஆம் ஆண்டு ஞானஸ்நானம் பெற்றார் என்பதில் இருந்து அவர் உயிரிழக்கும்போது 127 வயது என்பது நிரூபணமாவதாக அவரது பேரன் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை உயிர் வாழ்ந்த அதிக வயதுடையவர் என்ற பதிவு செய்யப்பட்ட சாதனையை 1997 ஆம் ஆண்டு 122 வயது உயிரிழந்த பிரான்ஸ் பெண்ணான ஜேன் கெல்மென்டி பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment