பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நிறைவேற்று பணிப்பாளர் பதவியில் இருந்து வசிம் கான் இராஜினாமா - News View

Breaking

Friday, October 1, 2021

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நிறைவேற்று பணிப்பாளர் பதவியில் இருந்து வசிம் கான் இராஜினாமா

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதான நிறைவேற்று பணிப்பாளராக இருந்த வசிம் கான் அந்தபதவியில் இருந்து விலகியுள்ளார்.

புதன்கிழமை காலை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிக்கை ஒன்றின் மூலம் இந்த இராஜினாமாவை உறுதிப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக ரமீஸ் ராஜா இந்த மாத தொடக்கத்தில் பொறுப்பேற்ற நிலையில் இந்த இராஜினாமா இடம்பெற்றுள்ளது.

இம்ரான் கானின் கட்டளையின் கீழ் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் உயர்மட்ட பதவிக்கு ரமீஸ் நியமிக்கப்படுவற்கு முன்னர் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் இராஜினாமா செய்தனர்.

No comments:

Post a Comment