புகையிரத சேவையை ஆரம்பிக்க ஆலோசனை - News View

About Us

About Us

Breaking

Saturday, September 25, 2021

புகையிரத சேவையை ஆரம்பிக்க ஆலோசனை

(இராஜதுரை ஹஷான்)

நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவையை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய ஆரம்பிக்க புகையிரத சேவையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

கடந்த ஒரு மாத காலமாக பயணிகள் புகையிரத சேவை முடக்கடப்பட்டதால் புகையிரத திணைக்களத்திற்கு 500 மில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தம்மிக ஜயசுந்தர சுட்டிக்காட்டினார்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் புகையிரத சேவையை மீள ஆரம்பிப்பது குறித்து வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டன் பின்னர் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய புகையிரத போக்குவரத்து சேவையை மீள ஆரம்பிப்பது குறித்து சுகாதார தரப்பினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவை குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

மின்சார புகையிரத சேவையை எதிர்வரும் காலங்களில் ஆரம்பிக்க திணைக்கள மட்டத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டை தொடக்கம் அம்பேபுஸ்ஸ வரையில் நிலக்கரி புகையிர சேவையை சுற்றுலாத்துறை சேவையை மேம்படுத்துவதற்காக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுஎன்றார்.

No comments:

Post a Comment