(நா.தனுஜா)
சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட சலுகைகளை வென்றெடுக்கும் நோக்கில் அதிபர், ஆசிரியர்களினால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கை நியாயமானதாகும். இருப்பினும் ஆசிரியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தினால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளில் ஏற்படக்கூடிய தொடர்ச்சியான இடையூறு, அவர்களின் முன்னேற்றத்திலும் சமுதாயத்தின் வளர்ச்சியிலும் நீண்டகால அடிப்படையில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று இலங்கைக் கத்தோலிக்க ஆயர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆகவே ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஆகிய இரு தரப்பும் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஏற்ற வகையிலான நம்பகரமான பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆயர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை மற்றும் அதனால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பில் இலங்கைக் கத்தோலிக்க ஆயர் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment