தடுப்பூசிக்கும், பாலியல் இனப் பெருக்க ஆரோக்கியத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை - விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா - News View

About Us

Add+Banner

Monday, September 27, 2021

demo-image

தடுப்பூசிக்கும், பாலியல் இனப் பெருக்க ஆரோக்கியத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை - விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா

8069f3992ade0587e8173432efd85557_XL
பாலியல் மற்றும் இனப் பெருக்க ஆரோக்கியம் மற்றும் தடுப்பூசிகளுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதினால் கருத்தரிக்காமை, மலட்டுத்தன்மை போன்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று சமூகத்தில் சில கருத்துக்கள் பரவி வருகின்றன. இது தொடர்பில் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை என்று சுகாதார அமைச்சின், குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் திருமதி. சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் (27) "தடுப்பூசிக்கு எதிரான கருத்துக்களை தோற்கடிப்போம்" என்ற தலைப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதனால் பாலியல் ஆரோக்கியத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. மேலும் தடுப்பூசி, கருவுறுதல் அல்லது மலட்டுத் தன்மையை பாதிக்கும் என்பதற்கு அறிவியல் சான்றுகள் இல்லை. 

எனவே, இளம் தலைமுறையினர் எந்தவித அச்சமும் சந்தேகமும் இல்லாமல் குடும்ப வாழ்க்கையை நடத்த முடியும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *